Ikuti Media Sosial MIC Perak

Tan Sri M. Ramasamy melawat Pemandu Teksi Mangsa Ribut di Buntong, Ipoh Barat

Naib Presiden MIC merangkap Pengerusi Badan Perhubungan MIC Negeri Perak, Tan Sri M. Ramasamy, telah mengadakan lawatan ke rumah seorang pemandu teksi yang merupakan golongan B40 yang mengalami kerosakan teruk akibat hujan lebat serta angin kencang di Buntong, Ipoh Barat.
 
Dalam lawatan tersebut, Tan Sri M. Ramasamy telah mendengar sendiri penjelasan daripada pemandu teksi berkenaan mengenai masalah yang dihadapinya selepas kejadian malang itu. Selain itu, beliau turut berbincang tentang pelbagai isu berkaitan rumahnya, termasuk keperluan pemulihan dan bantuan yang diperlukan bagi membaik pulih kediaman beliau.
 
Tan Sri juga mengambil kesempatan untuk berinteraksi bersemuka dengan pemandu teksi tersebut dan menyatakan komitmen beliau untuk membantu dengan membawa perkara ini ke perhatian Menteri Besar bagi mendapatkan bantuan yang sewajarnya.
டான் ஸ்ரீ எம் இராமசாமி புந்தோங் ஈப்போ பாராட் பகுதியில் புயல் காற்றினால் பாதிக்கப்பட்ட வாடகை வாகன ஓட்டுனரைச் சந்தித்தார்.
 
தேசிய மஇகா உதவி தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள் புந்தோங்கில் எற்பட்ட திடீர் புயல் காற்று மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட B40 நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வாடகை வாகன ஓட்டுனரை அவரின் இருப்பிடத்திற்குச் சென்று ஆறுதல் கூறினார்.
 
பாதிக்கப்பட்டவரைச் சந்தித்துப் பேசிய டான் ஸ்ரீ அவர்கள், ஓட்டுனரின் அந்த துயர சம்பவத்திற்குப் பிறகு கடந்து வரும் வாழ்கை சூழலை கேட்டறிந்தார். அவரின் துன்ப நிலையைக் கேட்டறிந்த டான் ஸ்ரீ பாதிக்கப்பட்டவரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி கலந்தாலோசித்தார்.
 
இவ்வேளையில் டான்ஸ்ரீ அவர்கள் பாதிக்கப்பட்டவரின் நிலமையைக் கருத்தில் கொண்டு இவ்விவகாரத்தை மாநில முதல்வரின் பார்வைக்குக் கொண்டுச் சென்று கூடிய விரைவில் ஏற்ற தீர்வினைக் காண்பதாக உறுதியளித்தார்.

Kongsi siaran ini :

WhatsApp
Facebook
LinkedIn
X