
Tan Sri M. Ramasamy, Naib Presiden MIC Kebangsaan dan Pengerusi Badan Perhubungan MIC Perak, bersama isteri, Puan Sri Indira Gandhi, telah mengadakan lawatan ke Kuil Sri Siva Subramaniar, Kampung Kepayang. Beliau merasmikan pembukaan dua gerai sempena sambutan Thaipusam 2025 dan dihormati dengan upacara parivattam.
Tan Sri juga menyampaikan ucapan inspirasi semasa persembahan seni budaya yang dihadiri seramai 2000 penganut. Dalam ucapan beliau menekankan pentingnya pendidikan dan lawatan ke AIMST pada 1 Mac 2025.
Beliau telah memberikan hadiah pertama(Motorsikal) sebagai sumbangan kepada pengurusan kuil.
டான் ஸ்ரீ எம். இராமசாமி கெப்பாயாங், ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயத்திற்கு வருகை
தேசிய ம.இ.கா உதவித் தலைவரும், பேராக் மாநிலத் தலைவருமான டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் தம் துணைவியார் புவான் ஸ்ரீ இந்திரா காந்தி அவர்களுடன் கெப்பாயாங், ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயத்திற்கு வருகைப் புரிந்தார். 2025 தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இரண்டு அங்காடி கடைகளைத் திறந்து வைத்த டான் ஸ்ரீ அவர்களுக்கு ஆலயத்தில் பரிவட்டம் கட்டி சிறப்பு செய்யப்பட்டது.
2000-கும் அதிகமான மக்கள் கலந்துக்கொண்ட கலைநிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய டான் ஸ்ரீ தமதுரையில் சமுதாய வளர்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மாநில ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட் கல்விச் சுற்றுலா குறித்து பேசினார்.
நிகழ்வின் முதல் பரிசான ஒரு மோட்டார் சைக்கிள் வண்டியினை ஆலய நிர்வாகத்திடம் டான் ஸ்ரீ வழங்கினார்.







