
Sumbangan RM20,000 Kepada SJK(T) Ladang Ayer Tawar Yang Terjejas Akibat Kebakaran
Pada 24 Februari 2025, Tan Sri M. Ramasamy, Naib Presiden MIC merangkap Pengerusi Badan Perhubungan MIC Negeri Perak, telah menyampaikan sumbangan sebanyak RM20,000 kepada Sekolah Jenis Kebangsaan Tamil (SJKT) Ladang Ayer Tawar yang terjejas akibat kebakaran teruk pada 6 Januari 2025.
Sebagai tanda sokongan, Tan Sri M. Ramasamy turut menyampaikan cek replika (mock check) bernilai RM20,000 kepada pihak sekolah. Sumbangan kewangan ini adalah sebahagian daripada usaha Tan Sri M. Ramasamy untuk membantu dalam proses pemulihan sekolah dan memastikan ia dapat berfungsi semula demi kepentingan para pelajar.
Selain itu, Tan Sri juga mengambil peluang untuk berinteraksi dengan penduduk setempat, mendalami kesulitan yang mereka hadapi, serta menyatakan komitmennya dalam menyokong segala usaha pemulihan dan pembangunan komuniti.
Dengan sumbangan tersebut, Tan Sri berharap agar sekolah tersebut dapat segera dipulihkan dan proses pembelajaran dapat diteruskan tanpa gangguan, sekaligus memberi harapan baru kepada semua pihak yang terlibat.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தேசிய வகை ஆயிர் தாவார் தொட்ட தமிழ்ப்பள்ளிக்கு ரிங்கிட் மலேசியா 20000 நன்கொடை
கடந்த 6.1.2025 திடிர் தீ விபத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட தேசிய வகை ஆயிர் தாவார் தமிழ்ப்பள்ளிக்கு நமது தேசிய மஇகா உதவி தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசமி நன்கொடையாக 24 பிப்ரவரி 2025 அன்று ரிங்கிட் மலேசியா 20000 வெள்ளி வழங்கினார்.
பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரை தனது செயலவை உறுப்பினர்களுடனும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து தன்னால் முடிந்த உதவியைக் கண்டிப்பாக செய்வேன் என வாக்களித்த நமது டான் ஸ்ரீ இராமசாமி அவர்கள் உடனடியாக அதற்கான ஆயுத்த வேலையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரிடம் ரிங்கிட் மலேசியா 20000 வெள்ளிக்கான மாதிரி காசோலையை எடுத்து வழங்கினார். இந்த தொகை தொடக்க கட்டமாக டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்களின் முயிற்சியின் வாயிலாக பள்ளிக்கூடத்தின் பிரச்சனைகள் நிவர்த்தி செய்து பள்ளிக்கூடம் இயல்பு நிலைக்குத் திரும்ப துண்டுகோலாக இருக்கும்.
அத்துடன் நமது டான் ஸ்ரீ அவர்கள் அவ்வட்டார மக்களுடன் ஒரு சந்திப்பும் நடத்தி கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டார். மக்களின் தேவைகளையும் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்த டான் ஸ்ரீ அதை நிவர்த்தி செய்ய தன்னால் முடிந்த உதவிகளை செய்ய்வேன் என உறுதியளித்தார். அவர் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தான் கொண்டுள்ள பற்றினை எடுத்துரைத்தார்.
இந்த நன்கொடைத் தொகையின் உதவியால் பள்ளி கட்டட புதுபிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு பள்ளி இயல்பு நிலைக்குத் திரும்பி கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தடங்கள் இன்றி தொடரும் என நம்பிக்கைப்பூண்டார். இது அனைத்து தரப்பினர்களுக்கும் நம்பிக்கைக் கொடுக்கும் என கூறினார்.







