Ikuti Media Sosial MIC Perak

Program “AIMST OUR CHOICE” Anjuran MIC Perak Berjaya dilaksanakan dengan Jayanya

Pada 1 Mac 2025, program “AIMST OUR CHOICE ” telah berjaya dianjurkan dengan penuh jayanya oleh Badan Perhubungan MIC Negeri Perak di bawah pimpinan Tan Sri M. Ramasamy, Naib Presiden MIC merangkap Pengerusi Badan Perhubungan MIC Negeri Perak. Program ini telah mendapat sambutan luar biasa dengan penyertaan seramai 1,121 orang pelajar, 487 orang ibu bapa, serta 250 ahli jawatankuasa program dari seluruh negeri Perak.
 
Program ini telah dirancang dan dilaksanakan dalam tempoh kira-kira satu bulan oleh Badan Perhubungan MIC Negeri Perak dengan usaha tanpa henti daripada semua pihak yang terlibat. Pelbagai strategi telah diaplikasikan bagi memastikan lebih daripada 1,000 pelajar menghadiri program ini dan dikawal dengan penuh disiplin. Antara langkah yang diambil termasuk penyebaran maklumat secara meluas melalui media sosial, kunjungan ke sekolah-sekolah terpilih, serta sesi taklimat bersama guru dan ibu bapa bagi menerangkan kepentingan program ini.
 
Selain itu, sistem pendaftaran dalam talian(Google Form) telah dilaksanakan bagi memastikan kehadiran peserta dapat dipantau dengan baik. Ketua-ketua Bahagian dan ahli jawatankuasa program turut memainkan peranan penting dalam mengawal selia pergerakan peserta bagi memastikan program berjalan dengan lancar dan teratur.
 
Dalam program ini, para pelajar dan ibu bapa telah berpeluang untuk melawat semua fakulti-fakulti dan sekaligus mendapatkan maklumat yang komprehensif mengenai kursus-kursus yang ditawarkan di AIMST. Lawatan ini bertujuan untuk memastikan para ibu bapa dan pelajar memahami bahawa AIMST menyediakan pelbagai program akademik yang memberi manfaat kepada semua pelajar.
 
Selain itu, pelbagai maklumat penting telah dikongsikan kepada para pelajar bagi meningkatkan minat mereka terhadap kursus-kursus yang ditawarkan di AIMST, termasuk Program Sijil, Pengajian Asasi, Diploma, dan Ijazah Sarjana Muda. Penjelasan mengenai program TVET turut diberikan, yang menekankan pembelajaran secara praktikal bagi memastikan kecemerlangan akademik serta kemahiran teknikal pelajar.
 
Tan Sri turut menyampaikan ucapan inspirasi bagi menambah kuat motivasi kepada para pelajar dan masyarakat India secara menyeluruh. Ucapan beliau menekankan kepentingan pendidikan sebagai pemangkin kejayaan dalam kehidupan dan pembangunan komuniti. Melalui program ini kita dapat melihat satu kesinambungan perpaduan yang tinggi di kalangan masyarakat India Negeri Perak.
 
Dengan ini, Tan Sri M. Ramasamy amat berterima kasih kepada canselor Universiti AIMST, Tan Sri Dato’ Sri Dr. S.A. Vigneswaran dan Naib Canselor, Datuk Seri Saravanan bagi sokongan yang diberikan untuk menjayakan program ini.
 
Program ini berjaya mencapai objektifnya dalam memberikan pendedahan menyeluruh kepada pelajar dan ibu bapa mengenai peluang pendidikan di AIMST serta memperkukuh sokongan kepada pelajar untuk mencapai kecemerlangan akademik dan profesionalisme dalam bidang pilihan mereka.
பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த” ஏம்ஸ்ட் நமது தேர்வு” முயற்சி மாபெரும் வெற்றி.
 
1 மார்ச் 2025, பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த” ஏம்ஸ்ட் நமது தேர்வு” முயற்சி மாபெரும் வெற்றி” ஏம்ஸ்ட் நமது தேர்வு” தேசிய மஇகா உதவித் தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் மாபெரும் வெற்றியினை எட்டியது. இந்நிகழ்வில் சுமார் 1,121 மாணவர்களுடன் 487 பெற்றோர்களும் மற்றும் 250 நிகழ்வின் ஏற்பாட்டளர்களும் கலந்துக் கொண்டனர்.
 
” ஏம்ஸ்ட் நமது தேர்வு” எனும் உண்ணதமான சிந்தனைத் தோன்றிய கனமே நமது தேசிய மஇகா உதவித் தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள் தனது நிர்வாக குழுவினரின் ஆதரவுடன் கடந்த ஒரு மாத காலமாக இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.இந்திகழ்வில் முறையே 1000 மாணவர்கள் கலந்துக்கொள்வதை உறுதி செய்ய சில யுக்திகளை வகுத்த நமது டான் ஸ்ரீ மிகவும் நேர்த்தியாக நிகழ்வு நடப்பதை உறுதிசெய்தார்.
 
இந்நிகழ்வு தொடர்பான விவரங்கள் ஊடகங்கள் மூலமாக பரப்புவதிலும்,பள்ளிகளைத் தொடர்புக் கொள்வதன் வழி, தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கம் அளித்தல் மூலமாகவும் விவரங்களைக் கொண்டுச் சேர்த்தனர்.
 
இதனைத் தொடர்ந்து ,ஏற்பாட்டு வேலைகளை துரிதப்படுத்த மாணவர்களின் பதிவுகளை இணையம் வாயிலாக பதிவு செய்வதை உறுதி செய்தனர்.இவ்வாராக பதிவு செய்தலின் வழி மாணவர்களின் வருகை மற்றும் எண்ணிக்கை முறையே உறுதி செய்தனர்.இந்நிகழ்வோட்டம் நேர்த்தியாகவும் சிறப்பான முறையில் நடந்தேரவும் அனைத்துத் தொகுதி தலைவர்களும் ஏற்பாட்டு குழுவினரும் மேற்பார்வையிட்டு செயல்பட்டனர்.
 
இம்முயற்சியின் வழி, மாணவர்களும் பெற்றோர்களும் மஇகாவின் கல்விக்கூடமான ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் அனைத்து கல்வித்துறைகளையும் அதன் வழி பெறப்படும் கல்வியினைப் பற்றியும் அறிந்துக் கொண்டனர். இந்த நிகழ்வின் வழி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்திய சமுதாயத்திற்கு மஇகா ஏம்ஸ்ட் பல்கலைகழகம் ஏற்படுத்தியுள்ள சலுகைகளைப் பற்றி அறிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வருகைப்புரிந்த மாணவர்களுக்கு ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கக் கூடிய, சான்றிதல் கல்வி ,அடிப்படைக்கல்வி,பட்டையக்கல்வி,இயங்கலை கல்வி போன்ற வாய்ப்புகள் பற்றிய விவரங்களைத் தெரிந்தும் பகிர்ந்தும் கொண்டனர்.இத்துடன் தொழில்திறன் கல்வி தொடர்பான விளக்கமும் வருகைப்புரிந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இதன் வழி மாணவர்கள் கைத்தொழில் கற்று வாழ்க்கையில் மேன்மை அடைய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்பதனை அறிந்தனர்.
 
தொடர்ந்து நமது தலைவர் டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள் இந்திய சமுதாய மாணவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலும் ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்பான கருத்துளைத் தனது உரையில் எடுத்துரைத்தார்.அவரின் சிறப்புரையில் நமது இந்திய சமுதாயம் வாழ்வில் முன்னேற கல்வி ஒன்றே ஏணிபடியாக இருப்பதை வழியுறுத்தினார்.
இது போன்ற நிகழ்வுகள் மூலம் நம் பேராக் மாநில இந்தியர்களிடையே ஒற்றுமை வளர்வதைக் காண இயன்றது.அனைவரும் ஒற்றுமையாக இணைந்து நிகழ்வின் அங்கங்களில் பங்கெடுத்தனர்.
 
இந்நிகழ்வு வெற்றியடைய பெரும் ஆதரவு வழங்கிய ஏம்ஸ்ட் பல்கலைகழகத்தின் வேந்தர் டான் ஸ்ரீ S.A டாக்டர் விக்னேஸ்வரன் மற்றும் துணை வேந்தர் டத்தோ ஸ்ரீ மு.சரவணன் அவரகளுக்கு டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
 
இன்று நடந்தேறிய நிகழ்வில் மாணவர்களும் பெற்றோர்களும் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள வாய்ப்பின் வழி கல்வில் சிறந்து விளங்க ஊக்கம் அளிப்பதை தெளிவுப்பெற்றனர்.இதன் வழி நிகழ்வின் நோக்கத்தினை அனைவரும் வெற்றிகரமாக அடைந்ததை டான் ஸ்ரீ அவர்கள் மகிழ்வுடன் தெரிவித்தார்.

Kongsi siaran ini :

WhatsApp
Facebook
LinkedIn
X