
Tan Sri Dato’ Sri SA. Vigneswaran, Presiden MIC serta Tan Sri M. Ramasamy, Naib Presiden MIC Kebangsaan merangkap Pengerusi Badan Perhubungan Negeri Perak bersama isteri, telah menghadiri majlis sambutan ulang tahun ke-57 kelahiran YB Datuk Seri Dr. M. Saravanan, Timbalan Presiden MIC Kebangsaan merangkap Ahli Parlimen Tapah, di kediaman YB Datuk Seri.
Majlis tersebut berlangsung dengan penuh kemeriahan dan dihadiri oleh ahli keluarga serta rakan-rakan rapat yang memberi sokongan dan penghargaan kepada YB Datuk Seri . Turut hadir dalam majlis ini adalah pelbagai pemimpin politik Malaysia, menunjukkan sokongan yang kukuh kepada YB Datuk Seri.
தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், மஇகா தேசிய தலைவர், தான் ஸ்ரீ எம். ராமசாமி, தேசிய மஇகா உதவித் தலைவரும் பேராக் மாநில தொடர்பு குழுத் தலைவர் அவர்கள் தமது துணைவியார் புவான் ஸ்ரீ இந்திரா காந்தி அவர்களுடன், தேசிய மஇகா துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அவர்களின் 57வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழா டத்தோ ஸ்ரீ அவர்களின் இல்லத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரும் இதனை சிறப்பித்தனர். அனைவரும் அன்பும் மதிப்பும் செலுத்தி, அவருக்கு தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் மலேசிய அரசியல்துறையின் பல முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டு, டத்தோ ஸ்ரீ அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி, அவருக்கு உறுதியான ஆதரவையும் அங்கீகாரத்தையும் வெளிப்படுத்தினர். விழா முழுவதும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் வழிவகுத்து, ஒருமைப்பாட்டைச் சுடர் விட்டது.


