
Perjumpaan berterusan Naib Presiden MIC merangkap Pengerusi MIC Negeri Perak, Tan Sri M. Ramasamy, bersama jawatankuasa beliau dengan ketua-ketua cawangan Bahagian Bagan Datoh, Negeri Perak.
Dalam pertemuan ini, Tan Sri menekankan pentingnya peranan setiap ketua cawangan untuk memberi tumpuan kepada usaha memperkukuhkan parti serta meningkatkan keahlian. Tan Sri turut menegaskan bahawa cawangan tidak akan ditutup dan beliau berjanji akan memastikan kelangsungannya. Beliau juga mengingatkan semua pihak untuk mewujudkan kerjasama yang lebih erat antara kita serta dalam kalangan komuniti.
Selain itu, Tan Sri turut membincangkan mengenai program “AIMST OUR CHOICE” yang dijadualkan pada 1 Mac 2025. Program ini bertujuan memberi peluang kepada pelajar B40 yang tidak mencapai kecemerlangan dalam pendidikan formal untuk melanjutkan pelajaran di Kolej TAFE. Tan Sri menekankan bahawa program TVET ini menyediakan peluang untuk mereka memperoleh kemahiran praktikal yang sangat diperlukan dalam pasaran kerja, sekali gus membuka lebih banyak peluang pekerjaan dan meningkatkan taraf hidup mereka.
Tahniah diucapkan kepada Pengerusi MIC Bahagian Bagan Datoh, En. Dato Supramaniam serta jawatankuasa dan semua ketua cawangan atas komitmen dan dedikasi yang tinggi terhadap parti dan masyarakat.
பேராக் மாநில மஇகா தலைவர் பாகான் டத்தோ மஇகா கிளைத் தலைவர்களுடன் சந்திப்பு,பேராக்
23 பிப்ரவரி 2025- தேசிய மஇகா உதவி தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி மற்றும் அவர்தம் செயலவை குழுவினருடன் இன்று மாநில தொகுதிகளுக்கிடையிலான சந்திப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து பாகான் டத்தோ தொகுதியின் கிளைத் தலைவர்களைச் சந்தித்தார்.
பாகான் டத்தோ தொகுதி கிளைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள், கிளைத் தலைவர்கள் கட்சியை வழுப்படுத்த ஆயூத்தாமான நடவடிக்கைகளை எடுப்பதில் தங்களின் பங்கினை ஆற்றவதுடன் ஒவ்வொரு கிளைத் தலைவர்களும் கிளையில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவர் தனது உரையில் எந்த ஒரு கிளைகளும் தனது நிர்வாக காலகட்டத்தில் மூடப்படாது என உறுதியளித்தார். அனைத்து கிளைகளும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யுமாறு கூறினார். கிளைஅவர் அனைத்து தரப்பினர்களுடன் இருக்கும் ஒற்றுமையே வெற்றிக்கான வழி என குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள் 1 மார்ச் 2025 ஏற்பாடு செய்துள்ள ” ஏம்ஸ்ட் நமது தேர்வு” எனும் நிகழ்வினைப் பற்றி விளக்கம் அளித்தார்.அதனைத் தொடர்ந்து B40க்குட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்திறன் கல்வி(TVET) தொடர்பான விளக்கத்தையும் தனது உரையில் குறிப்பிட்டார். கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்காக பிரத்தியேகமாக “TAFE” கல்லுரியில் தனது உயர்கல்வியை மேற்கொள்ளும் வாய்ப்பு மஇகா ஏற்படுத்தியுள்ளதை எடுத்துரைத்தார். இக்கல்லுரியில் பயிலும் மாணவர்களுக்கு படித்த முடித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு மாணவர்களின் வாழ்க்கை மேன்மை அடைய தொழில்திறன் கல்வி வாய்ப்புகளை கொடுப்பதைச் சுட்டி காட்டினார்.
சிறப்பான முறையில் இந்திய சமுதாயத்திற்கும் கட்சிக்கும் சேவையை வழங்கி வரும் பாகான் டத்தோ தொகுதி தலைவர் டத்தோ சுப்ரமணியம் மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.







