
Siri perjumpaan Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy dan jawatankuasa beliau bersama ketua-ketua cawangan MIC Negeri Perak diteruskan petang tadi dengan kunjungan ke Bahagian Padang Rengas.
Di dalam sesi perjumpaan tersebut, Tan Sri telah menyaran semua ketua cawangan agar menumpukan usaha ke arah memperkasakan parti dan meningkatkan keahlian parti sebagai persiapan menghadapi Pilihan Raya Umum Ke-16. Tan Sri juga menekankan pentingnya memperluaskan keahlian parti melalui PDM (Pusat Daerah Mengundi) dan memastikan setiap cawangan bekerjasama untuk meningkatkan kekuatan parti, sambil menegaskan bahawa perpaduan di kalangan semua pihak adalah kunci kejayaan.
Selain itu, Tan Sri turut membincangkan mengenai acara “AIMST OUR CHOICE” yang akan diadakan pada 1 Mac 2025, yang akan memberi fokus kepada peluang pendidikan dan peranan pentingnya peranan MIC dalam memperkasakan komuniti.
Syabas dan tahniah kepada Pengerusi MIC Bahagian Padang Rengas En R. Mariadass dan jawatankuasa serta semua ketua cawangan di atas komitmen terhadap parti dan masyarakat.
பாடாங் ரெங்காஸ் மஇகா தொகுதி,பேராக்
22 பிப்ரவரி 2025- பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவர் டான் ஸ்ரீ எம் இராமசாமி மற்றும் அவர்தம் செயலவை குழுவினரின் மாநில தொகுதிகளுக்கான சந்திப்புக் கூட்டம் இன்று பாடாங் ரெங்காஸ் தொகுதியின் கிளைத் தலைவர்களைச் சந்தித்தலுடன் மீண்டும் தொடங்கியது.
பாடாங் ரெங்காஸ் தொகுதி கிளைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள், கிளைத் தலைவர்கள் கட்சியை வழுப்படுத்த ஆயூத்தாமான நடவடிக்கைகளை எடுப்பதில் தங்களின் பங்கினை ஆற்றவதுடன் ஒவ்வொரு கிளைத் தலைவர்களும் கிளையில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். நாம் எதிர்கொள்ளவிருக்கும் அடுத்த 16 ஆம் பொதுத் தேர்தலைச் சந்திக்க புதிய வாக்களர்களை அடையாலம் காண வேண்டும் அத்துடன் அவர்களைக் கிளை உறுப்பினர்களாக பதிவு செய்வதும் அவசியம் என கூறினார். தலைவர்கள் அடையாளம் காணும் புதிய உறுப்பினர்கள் வாக்களிக்கும் மையம் வாரியாக பதிவு செய்தலின் வழி ஒவ்வொரு கிளையும் போதுமான வாக்களர்களைக் கொண்ட கிளையாக உருவெடுக்க முடியும் என டான் ஸ்ரீ எம் இராமசாமி உறுதியளித்தார். அவர் அனைத்து தரப்பினர்களுடன் இருக்கும் ஒற்றுமையே வெற்றிக்கான வழி என குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள் 1 மார்ச் 2025 ஏற்பாடு செய்துள்ள ” ஏம்ஸ்ட் நமது தேர்வு” எனும் நிகழ்வினைப் பற்றி விளக்கம் அளித்தார். இந்த நிகழ்வு நமது இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேசிய மஇகா கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதை உணர்த்தினார்.
சிறப்பான முறையில் இந்திய சமுதாயத்திற்கும் கட்சிக்கும் சேவையை வழங்கி வரும் பாடாங் ரெங்காஸ் தொகுதி தலைவர் திரு இரா.மாரிதாஸ் மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.




