
Siri jelajah Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy dan jawatankuasa beliau bagi perjumpaan bersama ketua-ketua cawangan MIC di seluruh Negeri Perak diteruskan dengan sesi di Bahagian Ipoh Barat hari ini.
Bahagian Ipoh Barat adalah signifikan kerana satu-satunya kawasan DUN dengan majoriti pengundi India di Malaysia, iaitu DUN Buntong dengan 52% pengundi India terletak di bawah Bahagian Parlimen Ipoh Barat. Tan Sri menyaran kesemua pemimpin akar umbi parti agar melipatgandakan usaha mereka menawan keyakinan dan sokongan masyarakat India di kawasan Ipoh Barat dan memperkukuhkan parti.
Tan Sri turut yakin sasaran peningkatan kepada 100 cawangan MIC daripada 33 cawangan sedia ada di Bahagian Ipoh Barat di dalam tempoh dua tahun dapat dicapai. Seramai 500 orang anak muda kaum India yang akan mendaftar sebagai ahli baru parti pada bulan ini turut menjadi penyuntik semangat terhadap kebangkitan MIC.
Tahniah kepada Pengerusi MIC Bahagian Ipoh Barat En S. Jayagopi, jawatankuasa bahagian dan barisan ketua cawangan di atas komitmen mereka terhadap agenda parti dan masyarakat.
ம.இ.கா ஈப்போ பாராட் தொகுதி, பேராக் மாநிலம்
இன்று பேராக் மாநில ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி மற்றும் அவர்தம் மாநில நிர்வாகத்தினர் ம.இ.கா ஈப்போ பாராட் தொகுதி கிளைத் தலைவர்களைச் சந்தித்தனர்.
நாட்டிலேயே 52% பெரும்பான்மை இந்திய வாக்காளர்களைக் கொண்ட புந்தோங் சட்டமன்றத் தொகுதி ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் அதிகமாக உள்ள இத்தொகுதியில் சேவைகளின் வாயிலாக சமுதாயத்தின் நம்பிக்கையைப் பெற்று, கட்சியைத் தொடர்ந்து வலுப்பெறச் செய்வது அனைத்து கிளைத் தலைவர்களின் தலையாய கடமையாகும் என டான் ஸ்ரீ வலியுறுத்தினார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில், ஈப்போ பாராட் தொகுதியில் தற்போது 33-ஆக உள்ள கிளைகளின் எண்ணிக்கை 100-ஆக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை கட்சி முன்னெடுக்கும் என டான் ஸ்ரீ கூறினார். அதே வேளையில், இம்மாதம் ஈப்போ பாராட் தொகுதியைச் சார்ந்த 500 இளையோர் ம.இ.காவில் புதிய உறுப்பினர்களாக இணையவுள்ளது புதிய உத்வேகத்தை அளிக்கின்றது.
சிறப்பான கட்சி, சமுதாயப் பணிகளை வழங்கி வரும் ஈப்போ பாராட் தொகுதி தலைவர் திரு எஸ். ஜெயகோபி, அவர்தம் நிர்வாகத்தினர் மற்றும் கிளைத் தலைவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!








