
Tan Sri M. Ramasamy, Naib Presiden MIC Kebangsaan merangkap Pengerusi MIC Negeri Perak, telah mengadakan Mesyuarat Penyelarasan bersama pihak pengurusan Universiti AIMST di kampus Sungai Petani, Kedah. Mesyuarat ini bertujuan untuk menyelaraskan persiapan bagi program yang akan diadakan pada 1 Mac 2025, yang melibatkan 1,000 pelajar dan 500 orang ibu bapa.
Selain itu, Tan Sri juga telah mengadakan satu mesyuarat tergempar bersama jawatankuasa tertinggi MIC Negeri Perak di Pejabat MIC Negeri Perak bagi memastikan semua persiapan berjalan lancar dan segala keperluan dipenuhi. Mesyuarat ini memberi tumpuan kepada aspek logistik, penyelarasan jadual, pengagihan senarai nama kepada ketua-ketua bahagian, serta penyertaan pelajar dan ibu bapa bagi memastikan perjalanan program mengikut perancangan yang ditetapkan.
Mesyuarat ini diadakan bagi memastikan program tersebut dapat dilaksanakan dengan jayanya.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் ஒருங்கிணைப்பு கூட்டம் & பேராக் மாநில ம.இ.கா முதன்மை நிர்வாகக் கூட்டம்
பேராக் மாநில ம.இ.கா தலைவரும், தேசிய உதவித் தலைவருமான டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் கெடா, சுங்கை பட்டாணி ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் அதன் நிர்வாகத்துடன் எதிர்வரும் 1 மார்ச் 2025 திட்டமிடப்பட்டுள்ள 1000 மாணவர்கள், 500 பெற்றோர்கள் கலந்துக்கொள்ளும் ‘ஏய்ம்ஸ்ட் நமது தேர்வு’ – ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக கல்வி சுற்றுலாத் திட்டத்தின் ஏற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தினார்.
அத்துடன், பேராக் மாநில ம.இ.கா அலுவலகத்தில் மாநில ம.இ.காவின் முதன்மை நிர்வாகத்தினருடன் இந்நிகழ்வின் ஏற்பாடுகளும், தேவைகளும் முறையே அமைவதை உறுதி செய்ய டான் ஸ்ரீ அவர்கள் அவசரக் கூட்டத்திற்கு தலைமையேற்றார்.
போக்குவரத்து ஏற்பாடு, நிகழ்ச்சி அட்டவணை, தொகுதி ரீதியிலான பங்கேற்பாளர் பட்டியல், மாணவர் மற்றும் பெற்றோர் வருகையை உறுதி செய்தல் என பல முக்கிய விவரங்கள் திட்டத்தின் நோக்கங்கள் வெற்றியடையும் நோக்கில் விவாதிக்கப்பட்டன.


