
இன்று பேராக் மாநில ம.இ.காவின் 2024/25 தவணைக்கான முதலாவது செயற்குழு கூட்டம் அதன் தலைவர் டான் ஸ்ரீ எம்.
இராமசாமி அவர்களின் தலைமையில் ஈப்போவில் அமைந்துள்ள மாநில ம.இ.கா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத்தின் அனைத்து 24 தொகுதிகளைச் சார்ந்த நிர்வாக உறுபினர்கள், மாநில இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
மாநில இந்தியர்கள் மற்றும் கட்சியினை வலுப்படுத்தும் வியூகங்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. தொகுதி ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவற்றை தமது கவனத்திற்கு கொண்டு வரும்படி டான் ஸ்ரீ எம். இராமசாமி கேட்டுக் கொண்டார். அதே வேளையில், மாநில மெந்திரி பெசார் அவர்களிடம் முன்வைக்க வேண்டிய மாநில இந்திய சமுதாயத்தின் தேவைகள், பிரச்சினைகள் குறித்து ஆராய வேண்டும் எனவும் கூறினார்.
இன்றைய கூட்டத்தில் டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் மாநிலச் செயலாளராக திரு கோ. சண்முகவேலு அவர்களின் நியமனத்தினையும் அறிவித்தார்.
பேராக் மாநில ம.இ.காவின் கட்சி, சமுதாயப் பணிகள் முறையே நிறைவேற முழு அர்ப்பணிப்புடன் செயல்பட மாநில செயற்குழு உறுதி வழங்கியது.






