
ம.இ.கா சுங்கை சிப்புட் தொகுதி மற்றும் அதன் இளைஞர், மகளிர் பிரிவுகளின் ஏற்பாட்டிலான பொங்கல் விழா 2025
பேராக் மாநில ம.இ.கா தலைவரும், தேசிய உதவி தலைவருமாகிய டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் தமது துணைவியார் புவான் ஸ்ரீ இந்திரா காந்தி அவர்களுடன் ம.இ.கா சுங்கை சிப்புட் தொகுதி மற்றும் அதன் இளைஞர், மகளிர் பிரிவுகளின் ஏற்பாட்டிலான பொங்கல் விழா 2025 நிகழ்விற்கு வருகைப்புரிந்து விழாவினைத் துவக்கி வைத்தார். அன்னாரின் வருகை சமுதாய வளர்ச்சியிலும், நமது கலை, பண்பாட்டினைக் காப்பதில் ம.இ.கா கொண்டுள்ள கடப்பாட்டினையையும் புலப்படுத்தும் வண்ணம் அமைந்தது.
பொங்கல் வைத்தல், கோலம் வரைதல், கலை படைப்புகள் என பல அங்கங்களுடன் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.
மக்களின் அமோக வரவேற்புடன் நடந்தேறிய இவ்விழா சமுதாயத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும், நமது பாரம்பரிய கலை, பண்பாட்டினை நிலைநாட்டும் வகையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது.





