Ikuti Media Sosial MIC Perak

Mesyuarat Tergempar Badan Perhubungan MIC Negeri Perak

Mesyuarat Tergempar MIC Negeri Perak pada 20 Februari 2025 yang dipengerusikan oleh Tan Sri M. Ramasamy telah membincangkan beberapa perkara penting, termasuk ketidak hadiran pengerusi dan ahli lembaga Yayasan Pembangunan Pendidikan India Negeri Perak ke mesyuarat perjumpaan yang dijadualkan pada petang ini serta penambahan keangotaan ahli lembaga Yayasan.
 
Sehubungan itu, MIC Negeri Perak menggesa Yayasan Pembangunan Pendidikan India Negeri Perak untuk memaparkan gambar Presiden MIC serta logo MIC pada backdrop dan kad jemputan Majlis Penyerahan Buku Latihan kepada murid-murid SJK(T) Negeri Perak.
 
MIC Negeri Perak berharap keputusan ini dihormati dan dilaksanakan bagi memastikan kerjasama yang berterusan dan memberi manfaat kepada masyarakat.
20.பிப்ரவரி 2025
பேராக் மாநில மஇகா முதன்மை நிர்வாகாக்குழுவின் அவசரக் கூட்டம்.
 
பேராக் மாநில ம.இ.கா தலைவரும், தேசிய உதவித் தலைவருமான டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்களின் தலைமையில் முக்கிய விவகாரங்களை விவாதிக்கும் நோக்கில் இன்று மாநில ம.இ.காவின் முதன்மை நிர்வாகக்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இன்று திட்டமிட்டபடி பேராக் இந்திய கல்வி மேம்பாட்டு அறவாரியத்துடன் நடைப்பெறவிருந்த கூட்டத்தை அறவாரியத்தின் தலைவர் மற்றும் செயலைவையினர் புறக்கணித்ததையும் மற்றும் அறவாரியத்தில் புதிய செயலவை உறுப்பினர்களைச் சேர்ப்பதைப்பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.
 
பேராக் மாநில மஇகா முதன்மை நிர்வாகாக்குழுவினர், இவ்வாரம் பேராக் இந்திய கல்வி மேம்பாட்டு அறவாரியத்தின் ஏற்பாட்டில் நடைப்பெறவிருக்கும் பேராக் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு தொடர்பான பாதகையில்
மஇகா தேசிய தலைவரின் படத்தையும் மஇகா சின்னத்தையும் தவறாமல் பதிக்க வேண்டும் என்பதனை ஏற்பாட்டு குழுவினரைக் கேட்டுக் கொண்டது.
 
பேராக் மாநில மஇகா முதன்மை நிர்வாகாக்குழுவினரின் இந்த முடிவினை பேராக் இந்திய கல்வி மேம்பாட்டு அறவாரியம் மதித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுகொண்டது. இரு தரப்பினரும் தொடர்ந்து ஒன்று இணைந்து மக்களின் நலனுக்காக செயல்படுதல் அவசியம் என மாநில மஇகா வழியுறுத்தியது.

Kongsi siaran ini :

WhatsApp
Facebook
LinkedIn
X